ETV Bharat / state

பெண்களை இழிவாகப் பேசும் ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் -  அண்ணாமலை

author img

By

Published : Jan 12, 2021, 10:53 AM IST

கரூர்: பெண்களை இழிவாகப் பேசிய ஸ்டாலினுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவாக பேசும் ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் -பாஜக அண்ணாமலை நம்பிக்கை!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' நடைபெற்று வருகிறது.

அதன்படி, கரூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகே தனியார் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவினை கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றில் இதில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான சிலம்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'தற்பொழுது கரூருக்கு வந்த ஸ்டாலின் பெண்களை கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். அதற்கு கரூர் பெண்கள் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

தமிழர்களின் நாகரிகம், பண்பாட்டைக் கேவலப்படுத்தும் திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் பாடம் புகட்டும் விதமாக இந்தப் பொங்கல் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்துக்களை கேவலமாக பேசும் ஸ்டாலினை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவின் வெற்றியை மகளிரின் ஆதரவோடு நடக்கும், இந்தப் பொங்கல் விழா நிரூபிக்கும் அச்சாரமாக அமைந்துள்ளது' என்றார்.

இதையும் படிங்க...கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.