ETV Bharat / state

அண்ணாமலை வெற்றியை பறித்த பள்ளப்பட்டி வாக்குகள் - tn election result

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தோல்வியை தழுவியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை.

annamalai
அண்ணாமலை
author img

By

Published : May 4, 2021, 5:38 PM IST

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் அருகே தொட்டியபட்டி குக்கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. இவர், 2011ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு தேர்ச்சியடைந்து, தனது 24 வயதிலேயே ஐபிஎஸ் அலுவலராக கர்நாடகாவில் பணியாற்றி வந்தவர்.

பத்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2019இல் திடீரென விருப்ப ஓய்வு பெற்று 2020இல் பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவரும் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அவ்வப்போது மேடைகளில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

annamalai
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை
தற்போது, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இருவருக்குமான பலப்பரீட்சை தீவிரமானது. அதிமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதியை கேட்டுப் பெற்று செந்தில் பாலாஜி மீதான கோபத்தை அரசியல் பிரசாரத்தில் காட்டத் துவங்கினார் அண்ணாமலை. இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் வாக்குகளை திமுகவுக்கு சாதகமாக நகர்த்தி வந்தார் செந்தில் பாலாஜி.
kanimozhi
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி
இதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் அப்பகுதிக்குள் பிரசாரம் மேற்கொள்ள முடியாமல் கடும் நெருக்கடியை சந்தித்தார்.நேரடியாக பாஜக தலைமையிடம் பேசி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அழைத்து வந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அமித் ஷா பிரசாரத்தை புகலூர் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டது.
அண்ணாமலை தோல்வி குறித்து மக்கள் கருத்து - 1
அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் விதமாக, பள்ளப்பட்டி பகுதியில் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக பேச்சாளர் வாகை சந்திரசேகர் கம்பம் செல்வேந்திரன், திருச்சி சிவா, கனிமொழி எம்பி ஆகியோரை தேர்தல் பரப்புரையில் செந்தில்பாலாஜி ஈடுபட வைத்தார். சூடுபிடித்த தேர்தல் பரப்புரை முடிவடைந்து, ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், மே 2 ஆம் தேதி அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கையானது 40 வேட்பாளர்களுக்கு ஒரே அறையில் 10 மேஜைகள் அமைக்கப்பட்டு 31 சுற்றுகளாக நடைபெற்றது.

அண்ணாமலை தோல்வி குறித்து மக்கள் கருத்து - 2
பதிவான வாக்கு எண்ணிக்கை விவரம்
  • அதிமுக கூட்டணி அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் பெற்ற மொத்த வாக்குகள் 68,553
  • திமுக வேட்பாளர் இளங்கோ பெற்ற வாக்குகள் 93,336.
  • நாம் தமிழர் கட்சி இஸ்லாமிய வேட்பாளர் அனிதா பர்வீன் பெற்ற வாக்குகள் 7,188.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் இஸ்லாமிய வேட்பாளர் முகமது ஹனிப் ஷாகில் பெற்ற வாக்குகள் 1382.
  • இதுதவிர அரவக்குறிச்சி தொகுதியில் நோட்டா வாக்குகள் 869

இதில், 26 ஆவது சுற்றில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி மின்னணு வாக்குப் பெட்டிகள் எண்ண தொடங்கப்பட்டது. 214 ஆவது வாக்கு சாவடியில் திமுக வேட்பாளர் இளங்கோ 571 வாக்குகள் பெற்றார். ஆனால் பாஜக வேட்பாளர் அண்ணாமலையோ வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார். 20ஆவது சுற்று முடிவில், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் சென்றுகொண்டிருந்த திமுக வேட்பாளர் இளங்கோ, அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் 3000 ,4000 என வாக்குகள் பெற்று, இறுதியாக 23 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

senthil
அண்ணாமலை வியூகங்களை உடைத்தெறிந்த செந்தில் பாலாஜி
பின்னர் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் 1154 வாக்குகள் கூடுதலாக பெற்று 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை தோற்கடித்தார். அண்ணாமலை தோல்வியடைந்ததில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் பகுதி இஸ்லாமியர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.