கரூர் மாவட்டம் காந்தி கிராமம் அருகே கரூர் பிரியாணி என்ற உணவகம் அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு ஆக.22ஆம் தேதி வந்த சகோதரர்களான கார்த்திக், யுவராஜ் ஆகியோர் கடை உரிமையாளரிடம் பிரியாணி கேட்டுள்ளனர்.
அதற்கு கடை உரிமையாளர் பிரியாணி இல்லை எனக் கூறியுள்ளார். இதற்கு பழிவாங்க நினைத்த சகோதரர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நேரத்தில் கரூர் பிரியாணி கடைக்கு வந்து கடையின் பொருள்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கடையின் உரிமையாளருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து உணவகத்தின் பொருள்களை சேதப்படுத்திய சகோதரர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி வழங்கிய விசிகவினர் வழக்குப் பதிவு