அரவக்குறிச்சி சட்டப்பேரவையில் மனு தாக்கல்செய்த மனுக்கள் மீதான பரிசீலனை அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. வேட்புமனு செய்திருந்த 46 வேட்பாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, திமுக உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள், பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு தாக்கலில் அவர் மீதான வழக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்டினர். இதனால் அண்ணாமலையின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு அந்த வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலர்கள் வேட்புமனு நிராகரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக்கூறி வேட்புமனுவை தள்ளுபடி செய்ய மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் நடத்திய வேட்புமனு பரிசீலனை தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மற்ற மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்றது. பரிசீலனை முடிவில் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதையும் படிங்க: பாகிஸ்தானில் இந்து பத்திரிகையாளர் கொலை!