கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகாவாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இங்கு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.இந்தக் கோரிக்கையை ஏற்ற அரசு, அரவக்குறிச்சியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்றத்தை அமைத்தது.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற வளாகம் திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் மூலம் அரவக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.