கரூர் மாவட்டம் மூக்ககிணத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (87). இவரது மனைவி காளியம்மாள் (67). இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும் செல்வராணி என்ற மகளும் உள்ளனர்.
தாந்தோணி மலையில் வசித்துவரும் செல்வராணி, தங்களிடமிருந்த ஆறு ஏக்கர் நிலத்தையும், ஐந்து பவுன் நகையையும் அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னதாகவே ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அந்தத் தம்பதியினர் கூறியுள்ளனர். மேலும், தங்களுடைய நிலத்தினை விரைவில் மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த திமுக எம்எல்ஏ