கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர் தானேஸ் என்கிற முத்துக்குமார். இவர் வேட்பாளர் பட்டியல் சரிபார்ப்பு முடிவடைந்ததையடுத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.22) காலை தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர், சீத்தப்பட்டி காலனி, கத்தாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாலை ஜெகதாபி கடைவீதி, காமராஜபுரம் பொரணி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், வாக்காளர்களின் காலில் விழுந்து ஆசி கேட்டு வாக்கு சேகரித்தார்.