கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரூர் மாவட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினராக நான்கு முறை பதவி வகித்த, முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மூன்று கோடியே 30 லட்ச ரூபாய் நிதியை கரூர் மாவட்டத்திற்கு 21 திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதியாக கொடுக்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா நிதியில் இருந்து செய்யாமல் எம்எல்ஏ நிதியில் இருந்து 16 திட்டப் பணிகள் செய்து விட்டோம் எனக் கூறி அந்த நிதியை திருப்பி அனுப்பி விட்டார்கள்.
கடந்த மாதம் ராஜ்யசபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் பல திட்டப் பணிகள் மேற்கொள்ள வாங்கி கொடுத்து உள்ளோம். அந்த நிதியை செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவும் கொடுத்து உள்ளோம். கரூர் மாவட்டத்தில் மட்டும் தனி அரசாங்கம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் வாங்கல் மல்லம்பாளையம், என்.புதூர் ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 500 யூனிட் மணலை தேக்கத்தில் விட்டுச் சென்றனர்.
இந்த தேங்கிய மணல் குவியல்களை மணல் கடத்தல்காரர்கள் பகலில் திருடி விட்டார்கள். இது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக வழங்கி இருக்கிறோம்.
-
நம் கரூர் மாவட்டத்தில் கழகத்தை சார்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பகுதிகளுக்கு
— M.R Vijayabhaskar (@OfficeofminMRV) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்குவதில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டுவது குறித்தும்,காவேரி ஆற்றுப் பகுதியில் நடைபெறும் தொடர் மணல் திருட்டு குறித்தும்,
வாக்காளர் பட்டியலில் இறப்பு,இரட்டை… pic.twitter.com/EL4vaEG3I8
">நம் கரூர் மாவட்டத்தில் கழகத்தை சார்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பகுதிகளுக்கு
— M.R Vijayabhaskar (@OfficeofminMRV) November 1, 2023
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்குவதில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டுவது குறித்தும்,காவேரி ஆற்றுப் பகுதியில் நடைபெறும் தொடர் மணல் திருட்டு குறித்தும்,
வாக்காளர் பட்டியலில் இறப்பு,இரட்டை… pic.twitter.com/EL4vaEG3I8நம் கரூர் மாவட்டத்தில் கழகத்தை சார்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பகுதிகளுக்கு
— M.R Vijayabhaskar (@OfficeofminMRV) November 1, 2023
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்குவதில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டுவது குறித்தும்,காவேரி ஆற்றுப் பகுதியில் நடைபெறும் தொடர் மணல் திருட்டு குறித்தும்,
வாக்காளர் பட்டியலில் இறப்பு,இரட்டை… pic.twitter.com/EL4vaEG3I8
கரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்காமல் இருப்பது குறித்து முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து இறந்தவர்களின் பெயர்களை பாதிக்கு மேலாக நீக்கினார்கள். இன்னும் முழுமையாக நீக்கவில்லை. மேலும், வாக்களார் பட்டியில் இரட்டைப் பதிவுகள் உள்ளன. அதை நீக்குவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளோம்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து புதிய பட்டியல் வெளியிடுவதாக கூறுகிறது. ஆனால் வாக்களார் பட்டியலில் பிழைகள் நீக்கப்படாமலும், இரட்டைப் பதிவுகளும், இறந்தவர்களின் பெயர்களும் நீக்காமல் ஒரு தொகுதியில் மட்டும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உள்ளது.
இந்தநிலை நீடித்தால் நியாயமாக தேர்தல் நடைபெறாது. திமுகவினர் திருட்டுத்தனமாக வாக்குகளைப் பதிவு செய்ய தயாராக உள்ளனர்" என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். இந்நிகழ்வின் போது ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கரூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!