ETV Bharat / state

கரூரிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - aiadmk meeting

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக கூட்டம்
அதிமுக கூட்டம்
author img

By

Published : Jun 20, 2021, 7:54 AM IST

கரூர்: மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று (ஜூன்.19) மாலை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்தல், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலில் கரூரில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததால், கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக சூளுரை: அதிமுகவினர் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.