கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதி அடுத்த மணவாடி பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் நேற்று தவிட்டுபாளையம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தினேஷ் என்ற (வயது26) இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதைக் கண்ட இளைஞர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மாயமான இளைஞரை தற்போது வரைத் தேடி வருகின்றனர்.