கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குள்பட்ட நச்சலூர் பகுதியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த லேப் சரவணன் என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் தலையில் வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குளித்தலை காவல் துறையினர், அவரது உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
![கொலை செய்யப்பட்ட நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7125806_img.jpg)
குளித்தலை தலைமை காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அப்போது, கடந்த சில நாள்களுக்கு முன்பு பால் வியாபாரி அன்பழகன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக இரு கொலைகள் ஆவணத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு: புதுமாப்பிள்ளை படுகொலை!