கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நிமிர்ந்து நில் துணிந்து செல் என்னும் தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகள் தோறும் பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்.
பள்ளி மாணவிகள் அளிக்கும் புகார் ரகசியம் காக்கப்படும் . தனக்கு நடக்கும் அநீதியை வெளியே சொல்லுவதற்கு பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்சப்பட கூடாது என வலியுறுத்தி வருகிறார்.
மாணவி புகார்
அதன்பேரில் 1098 என்ற எண்ணிற்கு நேற்று முன் தினம் (நவ.30) 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனது தாய்மாமன் 3 மாதங்களாக தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்து வருவதாக புகார் அளித்திருந்தார்.
இது குறித்த விசாரணையில் மாணவியின் பெற்றோர் கடந்த ஒரண்டாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதும், 15 வயதான மாணவி தனது பாட்டியின் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது.
நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரூபி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
கைது செய்யப்பட்டவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், பள்ளி மாணவியின் புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பை எச்சரித்த நீதிபதி