கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராய வியாபாரம் அதிகமாகியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்குள்பட்ட சணப்பிரட்டி பகுதிகளில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பசுபதிபாளையம் சணப்பிரட்டி காவல் துறையினர், சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய தம்பிதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியது உறுதிசெய்யப்பட்டது. இவர் வீட்டில் உள்ள குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளார்.
அவரிடமிருந்து ஒன்றரை லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து, தம்பிதுரை மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கொதிக்கும் கோடை வெயில்: அனலூட்டும் பருல் யாதவின் புகைப்படங்கள்