ETV Bharat / state

வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி பலி - karur

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி பலி

author img

By

Published : Jul 24, 2022, 3:11 PM IST

கரூர்: முள்ளிப்பாடி ஊராட்சி தலைவாசல் மேற்கு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, செம்மறி ஆடுகளை கடித்துக் குதறிய வெறி நாயை துரத்தியபோது, விவசாயி ராமசாமி என்கிற முத்துக்காளை(70) என்பவரை வெறிநாய் தாக்கியது.

கடந்த மூன்று மாதமாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் ராமசாமி உயிரிழந்தார்.

இதனிடையே கடவூர் வட்டார கால்நடை துறை சார்பில் இன்று வெறி நாய் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி போடப்படுகிறது.

கடவூர் மலை பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்களை வனத்துறை உதவியுடன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடவூர் மலைப்பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடும் வெறி நாய்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.