கரூர் மாவட்டத்தில், கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் பல இடங்களில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் ஆத்தூர் மங்கலம் குறிச்சி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பூமிபூஜை, சுமார் 891 லட்சம் மதிப்பீட்டில் காவிரி கரையோரம் உள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில்:- கரூர் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக ரயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும் கரூரில் எட்டு ஆயிரம் பேருக்கு விதவைகள், முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
இன்று மட்டும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 990.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியினை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் இருக்கk கூடிய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைபோல் பரவும் கரோனா வைரஸ் - ஆர்.பி. உதயகுமார்