கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு அலுவலர் மோகன்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் தகவல் அளித்து புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், உள்ளாட்சி நிர்வாக கணக்காளரின், உதவி இயக்குநர் குளித்தலை நகராட்சியில் கணக்கு தணிக்கே மேற்கொண்டார்.
அப்போது நகராட்சியில் கணக்காளராக பணியாற்றியவர் (சத்யா பெண் ஊழியர் ) 59 லட்சத்து 73 ஆயிரத்து 435 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர், சிபிஎஸ், பிஎஃப், நகராட்சி நிர்வாக நிதி போன்றவற்றில் உள்ள பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. அந்த பணத்தை பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ். சுப்பிரமணி, சிபி ஆகிய பெயர்களில் காசோலை வாயிலாக மோசடி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை ஆய்வாளர் ரேணுகாதேவி இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலைமறைவான சத்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையை உலுக்கிய பண மோசடி சம்பவம்: எம்எல்எம் நிறுவனர் கைது!