ETV Bharat / state

உணவக உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை திருட்டு - 58 சவரன் நகை திருட்டு

கரூரில் உணவக உரிமையாளர் வீட்டில் சுமார் 58 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உணவக உரிமையாளர் வீட்டில் 58 சவரன் நகை திருட்டு

author img

By

Published : Jun 23, 2021, 8:52 AM IST

கரூர்: புலியூர் பகுதி செட்டிநாடு சிமெண்ட் எதிரே உணவகம் நடத்திவருபவர் விஸ்வநாதன். இவர், ஏபி நகரிலுள்ள தனது வீட்டை நேற்று காலை 10 மணியளவில் பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுவிட்டார்

பின்னர், மதியம் 2 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 58 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

குற்றவாளிக்கு வலை

இதையடுத்து, உடனடியாக அவர்கள் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கைரேகை வல்லுநர்களை வைத்து ஆதாரங்களைச் சேகரித்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் நடந்த அதே பாணியில் சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.