ETV Bharat / state

கரூரில் விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்! - சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

கரூர் மாவட்டத்தில் 12 கல்குவாரிகள் விதிமுறைகள் மீறியதாக 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரூரில் விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்

author img

By

Published : Jun 30, 2023, 10:56 PM IST

கரூர்: பரமத்தி தென்னிலை, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான கல் குவாரிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக, அரசு அனுமதியுடன் 76 சாதாரண கல் குவாரிகளும் அரசு புறம்போக்கு நிலத்தில் மூன்று கல்குவாரிகளும் குத்தகைக்கு உரிமம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதிக்காலம் முடிந்தும் கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாகவும், அனுமதி பெற்ற கல்குவாரிகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவு வெடிவைத்து கற்கள் எடுக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டவர்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர்.

இதற்கு முன்பு கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், சிவா என்பவர் தொடுத்த வழக்கில் கரூர் மாவட்டத்தில் 335 கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், மேலும் 100 கல்குவாரிகளுக்கு அனுமதி பெறுவதற்காக அரசுக்கு விண்ணப்பித்து இருப்பதால் ஏற்கனவே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அந்த உத்தரவில் கல்குவாரிகளில் விதிமுறைகளை ஆய்வு செய்வதற்கு அரசு நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கல் குவாரி கருத்து கேப்புக் கூட்டத்தில் தெரிவித்து வந்தனர்.இதன் தொடர்ச்சியாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கரூர் மாவட்ட ஆட்சியரும் சுரங்கத்துறை துணை இயக்குநர் நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்சியாக கடந்த ஜீன் 12ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் முரளி சங்கர் உடனடியாக கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி உள்ள கல்குவாரிகளுக்கு அபராத தொகை வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 42 குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டதில், விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பபட்டது.

இதன்படி கரூர் மாவட்டத்திலுள்ள 12 கல்குவாரி நிறுவனங்களுக்கு 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி என்பவர் நடத்தி வரும் கல்குவாரிக்கு மட்டும் 23.54 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், கரூர் மாவட்டத்தில் மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிப்பதற்கான தொகை கணக்கிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையாக அனுமதி பெற்று இருந்தும் தற்பொழுது இயக்கத்தில் இல்லை என அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கல்குவாரிகள் இயங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கல்குவாரிகள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஆடு மேய்க்க அபராதம் விதிக்கும் வனத்துறை - விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.