கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து இரண்டு தங்க மோதிரத்தையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், மாணவியிடம் மோதிரம் இல்லாததை அறிந்த பெற்றோர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, பக்கத்து வீட்டு இளைஞர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதை பற்றி, பெற்றோர்களிடம் மாணவி கூறியதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில், ரத்தின சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!