கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் செல்வின். இவரது மகள் சஜி (19). இவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கரோனா ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் இருந்த சஜி, வீட்டிலிருந்தே ஆன்-லைன் வகுப்பில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து சஜியின் தந்தை செல்வின் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சஜியை தேடி வந்தனர்.
இதையடுத்து திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஷியாங்கோ என்ற வாலிபருடன் சஜி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர். அவரது குடும்பத்தினரை பிடித்து வந்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவி சஜி வாஸ்ட்அப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பள்ளிப் பருவத்தில் ஷியாங்கோவை காதலித்து வந்தேன். அவர் வேறு சாதி, மதம் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நான் கிறிஸ்தவர், அவன் முஸ்லிம். இதனால் வேறுவழியின்றி ஷியாங்கோவிற்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக மின்னஞ்சல் செய்தேன். இதனால், அவர் என்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், தற்போது எனது கணவரின் குடும்பத்தாரை காவல்துறையினர் பிடித்து வைத்து, நானும் எனது கணவர் ஷிாங்கோவும் சரணடைந்தால்தான் அவர்களை விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.
இது தொடர்ந்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளவதை தவிர வேறு வழியில்லை. இதற்கு முழு பொறுப்பும் எனது குடும்பத்தினர்தான்" என்று பேசியுள்ளார்.
மேலும், “தனது கணவர் இவ்வாறு பேச சொல்லவில்லை, இதை நானே முழு மனதுடன் பேசுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இளைஞர்கள் கைது