கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். தமிழில் விஷ்ணுபுரம், காடு, அறம், இரவு, உலோகம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோல் கடல், சர்கார், 2.0 உள்ளிட்ட படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். அதேபோல் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களையும் கூறி வருபவர்.
இந்நிலையில் நேற்று இரவு பார்வதிபுரத்தில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று, மாவு வாங்கும் விவகாரத்தில் மளிகை கடைக்காரர் மனைவி கீதா என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கீதாவின் கணவரும், கடைக்காரரின் உரிமையாளருமான செல்வம் ஜெயமோகனை ஆவேசமாக தாக்கினார்.
மேலும், தானும் தாக்கப்பட்டதாக கீதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் எழுத்தாளர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து எழுத்தாளர் ஜெயமோகன் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.