கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கிய நிலையிலே உள்ளது.
அதேபோல் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் மீனவர் கிராமத்தில் லூர்து காலணி பகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்து செல்ல கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.
இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் கூறியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தேங்கி நிற்கும் மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தவும், நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கையும் விடுத்தனர்.
இதையும் படிக்க: 'நீரில் சிக்கியவரை எவ்வாறு மீட்க வேண்டும்?' - ஒத்திகை காட்டிய மீட்புப்படையினர்!