ராஜஸ்தான் மாநிலத்தில் விமான துறையில் பணியாற்றிவரும் சோபியாகான் என்ற பெண், நம்பிக்கை என்ற தலைப்பில் உலக நன்மை, சமாதானம், மனித நேயம், சமதர்மம், இந்தியாவை நேசித்தல், முதியோரை காப்பாற்றுதல், சிறுவர் சிறுமியரை பாதுகாத்தல் என்பதை வலியுறுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க நினைத்தார்.
அதற்காக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மராத்தான் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காஷ்மீரிலிருந்து தனது மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கிய சோபியாகான், குமரி எல்லை வரை உள்ள 4 ஆயிரத்து 35 கி.மீ துாரத்தை 100 நாட்களில் ஓடி கடக்க திட்டமிட்டார்.
இந்நிலையில், 13 நாட்களுக்கு முன்னதாகவே தான் சேர வேண்டிய எல்லையான கன்னியாகுமரியை 87 நாட்களில் வந்தடைந்த சோபியாகான், குமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் காலை நனைத்து கடலைத் தொட்டு வணங்கினார். அவரை குமரி மாவட்ட சப்-கலெக்டர் சரண்யா ஹரி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.