கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவரது மனைவி விமலா. இவர்கள் இடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும் விமலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜான்சன் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறியுள்ளார்.
இது குறித்து விசாரிக்கச் சென்ற அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விமலாவின் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத்தொடர்ந்து குலசேகரம் காவல் துறையினர் ஜான்சனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சடலம் கட்டி தொங்கவிட்டதைப் போன்ற நிலையில் இருந்ததால் காவல் துறையினர் ஜான்சனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... பணி முடித்து வீட்டுக்குச் சென்ற காவலர் தூக்கிட்டுத் தற்கொலை!