கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரிய மாணிக்கபுரம் பகுதியில் சில தினங்களுக்கு முன் வள்ளியூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரெசி என்ற ரஜினிகுமார் (33) எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதில் முக்கியக் குற்றவாளியாக அவரது நண்பர் கேதீஸ்வரன், பழனி, முகமது ஃபைசல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உடல் எரிந்த காதலனின் புகைப்படத்தை பார்த்த கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் அனுஷா(27) அதிர்ச்சியுற்று நேற்று (மே 8) காலை வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதில் உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் ரெசி வேறு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிகிறது.