ETV Bharat / entertainment

நயன்தாரா திருமணம் போல் நாக சைதன்யா திருமணம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமா? - NAGA CHAITANYA MARRIAGE

Naga chaitanya marriage: பிரபல நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

நாக சைதன்யா, சோபிதா துலிபாலா
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா (Credits - Nagarjuna X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 11:16 AM IST

ஹைதராபாத்: பிரபல நடிகர் நாக சைதன்யா திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது. இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இருவரும் ஒன்றாக தோன்றினர்.

வரும் டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் பிரமாண்டமான முறையில் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் திரைப் பிரபலங்கள் பலர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நாக சைதன்யா திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை 50 கோடிக்கு பிரபல நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.

இதுகுறித்து நாக சைதன்யா நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனாகிய நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரும் விவாகரத்து பெற்றனர். முன்னதாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் மற்றும் நயன்தாரா சொந்த வாழ்க்கை ஆவணப்படமாக nayanthara beyond the fairy tale என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியானது.

அந்த வீடியோவில் ’நானும் ரௌடி தான்’ பட காட்சிகள் பயன்படுத்தியதால் காப்புரிமை பிரச்சனை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நயன்தாரா, நடிகர் தனுஷிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்தது.

இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் நடிகை ஜோதிகா சுவாமி தரிசனம்; அன்பளிப்பு கொடுத்த ரசிகர்கள்!

இந்நிலையில் தற்போது நாக சைதன்யா திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. சோபிதா துலிபாலா ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ’தாண்டேல்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.