ETV Bharat / state

கணவனுடன் தகராறு - மனைவி இரு குழந்தைகளுடன் விஷம் குடித்த சோகம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவம்
author img

By

Published : Nov 25, 2019, 6:19 PM IST

Updated : Nov 25, 2019, 6:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அறுகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜூ. இவர் வாடகை வேன் ஓட்டுனராக வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி மினி (27) என்ற மனைவியும், ரபிஷா மோல், ரிச்சர்ட் மோனு என்ற குழந்தைகளும் உள்ளனர்.

நவம்பர் 19ஆம் தேதி இரவு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மினி தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். பிரவின் ராஜூ உடனே மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் மினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவம்

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆய்வாளர் திட்டியதால் துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தானும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
Body:tn_knk_01_mother_deth_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தானும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவின் ராஜூ. வாடகை வேன் ஓட்டுனராக நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மினி (27) என்ற மனைவியும் ரபிஷா மோல், ரிச்சர்ட் மோனு என்ற இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், கடந்த 19 ம் தேதி இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மினி தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து ,தானும் விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று பேரையும் மீட்டு பிரவின் ராஜூ அருகிலுள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் தாய் மினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பச்சிளம் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விசமருந்தி உயரிழந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
Last Updated : Nov 25, 2019, 6:34 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.