குமரி மாவட்டம் வல்லங்குமரன்விளை பகுதியை சேர்ந்தவர் சுஜி(32). இவருக்கும் திக்கிலான்விளை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித்(34) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது மாப்பிள்ளை மாற்றுத்திறனாளி என்பதால், வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றும் மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு ரஞ்சித்தும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து சுஜியிடன் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுஜி, கணவன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சுஜியின் தந்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கை ஆர்டிஓ விசாரித்து வந்ததுள்ளார். இந்நிலையில், ரஞ்சித்தை ஈத்தாமொழி காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக சுஜியின் மாமனார் செல்லதுரை, மாமியார் வசந்தா, உறவினர்கள் சிவரஞ்சனி, அனிதா ஆகியோரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் திருட்டு: வீட்டில் வெள்ளையடித்த 2 பேரிடம் விசாரணை!