ETV Bharat / state

தீயிலிருந்து குடியிருப்புப் பகுதிகளை காத்த மழை! - குடியிருப்புக்குள் விழுந்தது

கன்னியாகுமரி: மேட்டுக் குடியிருப்புப் பகுதியில் நிகழவிருந்த பெரும் தீ விபத்தை மழை தடுத்துநிறுத்தியதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி
author img

By

Published : Aug 9, 2019, 3:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மேட்டுக் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் இயங்கிவருகின்றன.

இன்று அதிகாலை அதில் ஒரு காற்றாலை தீப்பற்றி எரிந்து வெடிச்சத்தம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது அங்கு மழைபெய்துகொண்டிருந்ததால் ஊர்மக்கள் அச்சத்தத்தை இடி ஒலி என எண்ணி கவனிக்காமல் இருந்துள்ளனர்.

மறுபடியும் வெடிச்சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் வெளியில் வந்து பார்த்தபொழுது ஒரு காற்றாலை தீப்பிடித்து எரிந்துகொண்டுடிருந்தது.

மேலும் எரிந்துகொண்டிருந்த காற்றாலையின் பாகங்கள் காற்றின் வேகத்தில் பறந்துசென்று அருகிலுள்ள குடியிப்புகளுக்குள் விழுந்ததில் கார் ஒர்க் ஷாப் ஒன்று தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் தீ அதிகமாகாமல் இருக்க தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நல்வாய்ப்பாக அப்போது அங்கு மழைபெய்து கொண்டிருந்ததால் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ அணைந்துவிட்டது. இதனால் மழையால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தனியார் காற்றாடி தீப்பிடித்து எரிந்தது. காற்றாடியின் பாகங்கள் குடியிருப்பு பகுதியில் சிதறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.Body:குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாடி அமைந்துள்ளது. இன்று அதிகாலை காற்றடியில் இருந்து திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. ஆனால் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் இடியுடன் கூடிய மழை பெய்கிறது என நினைத்து இருந்துள்ளனர்.
எனினும், சிறிது நேரத்தில் மீண்டும் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வெளியில் வந்து பார்த்தபோது காற்றாடி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
மேலும், காற்றடியில் இறக்கை ஒன்று காற்றின் வேகத்தில் அருகில் உள்ள வீடுகளின் மீது வந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தங்கள் வீட்டுக்குள் கதவுகளை மூடிக்கொண்டு தஞ்சமடைந்தனர். மேலும் பக்கத்தில் உள்ள கார் ஒர்க் ஷாப்பில் ஒரு துண்டு விழுந்து அங்கிருந்த டயர்கள் தீப்பிடித்து எரிந்தன. அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் தீ அணைந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். அவர்கள் வருவதற்குள் முழுமையாக தீ அணைந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.