கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை பயங்கரவாதிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையில் ஈடுபட்டதாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இந்நிலையில், இவ்வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
கேரளாவிலிருந்து கன்னியாகுமரி வந்த என்ஐஏ அலுவலர்கள், சமீம், தவ்பீக் ஆகியோரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இன்று (ஜூன் 22) நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் களத்தில் நிற்கிறது - ராஜன் செல்லப்பா