ETV Bharat / state

புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் - யார் இந்த தேவசகாயம் பிள்ளை.. திருவாங்கூர் அரண்மனை அதிகாரி டூ புனிதர் வரை.. - அரண்மனை அதிகாரி டூ புனிதர் வரை

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இத்தாலியில் 15ஆம் தேதி நடைபெறுகிறது. போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும். புனிதர் பட்டம் பெறுமளவுக்கு தேவசகாயம் பிள்ளை என்ன செய்தார் என்பது குறித்த சிறப்பு கட்டுரை...

வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம் வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்what-did-devasahayam-pillai-to-get-canonization-and-who-is-he  போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை தேவசகாயம் பிள்ளைக்கு அறிவிக்கிறார் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் - யார் இந்த தேவசகாயம் பிள்ளை..
what-did-devasahayam-pillai-to-get-canonization-and-who-is-he போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை தேவசகாயம் பிள்ளைக்கு அறிவிக்கிறார் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் - யார் இந்த தேவசகாயம் பிள்ளை..
author img

By

Published : May 14, 2022, 8:25 AM IST

Updated : May 14, 2022, 7:47 PM IST

தமிழ்நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் பிறந்த தேவசகாயம் பிள்ளை மறை சாட்சியாகவும் புனிதராகவும் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களால் போற்றப்பட்டு வருகிறார். தேவசகாயம் பிள்ளைக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைமை சில மாதங்களுக்கு முன்பு புனிதர் பட்டம் அறிவித்து கவுரவித்தது.

என்ன செய்தார் தேவசகாயம் பிள்ளை: இதனிடையே, வரும் 15 ஆம் தேதி ரோமில் நடைபெறும் விழாவில் போப்பாண்டவர் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டத்தை அறிவிக்கிறார். புனிதர் பட்டம் பெறுமளவுக்கு தேவசகாயம்பிள்ளை என்ன செய்தார் என்பதை விரிவாகப் பார்க்கலாம். தேவசகாயம்பிள்ளை தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் 1712 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. அப்போது இவர் பிறந்த நட்டாலம் பகுதி கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

புனிதர் பட்டம் பெறுமளவுக்கு தேவசகாயம் பிள்ளை என்ன செய்தார்

திருவாங்கூர் சமஸ்தான மன்னர்: நீலகண்டன் கேரள மாநிலத்தில் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பார்க்கவி அம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தது. நீலகண்டன் சிறுவயதிலேயே பல மொழிப்புலமை, கலைத் திறமை, ராணுவ ஆயுதங்களை கையாளும் திறமை என பல்வேறு திறமைகளை பெற்றிருந்தார்.

அதன் காரணமாக அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் பத்மநாபபுரம் கோட்டையில் நீலகண்டன் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். குறிப்பாக ராணுவ விவகாரங்கள் சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் பிள்ளை

கிறிஸ்தவராக மாற வேண்டிய சூழல்: இந்தக் காலகட்டத்தில் தான் நீலகண்டன் கிறிஸ்தவராக மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதாவது கடந்த 1741இல் டச்சு படைகள் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக திருவாங்கூர் மன்னருடன் போர் நடத்தியது. இதில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகள் டச்சுப் படைகளை தோற்கடித்தது.

இதனையடுத்து, டச்சுப் படை தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த டெனடிக்டுஸ் தே டிலனாய் சிறை பிடிக்கப்படுகிறார். அதன் பின் ஒரு கட்டத்தில் டிலனாயை மன்னர் மார்கண்ட வர்மா தனது படையின் ஆலோசகராக நியமித்ததுள்ளார். படை ஆலோசகர் என்ற முறையில் ராணுவ விவகாரங்களைக் கவனித்து வந்த அதிகாரி நீலகண்டன் டிலனாயுடன் நண்பராகப் பழகி உள்ளார். அப்போது திடீரென நீலகண்டன் வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மன வேதனைக்கு ஆளாகியுள்ளார்.

அரச கட்டளையை மீறிய தேவசகாயம் பிள்ளை: இந்த சமயத்தில் டிலனாய் கிறிஸ்தவ மதம் குறித்தும் இயேசு குறித்தும் பல்வேறு விஷயங்களை கூறவே அதைக் கேட்டறிந்த நீலகண்டன் முறைப்படி திருமுழுக்குப் பெற்று தன்னை ஒரு கிறிஸ்தவனாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகின்றன. மேலும் அன்றிலிருந்து நீலகண்டன் என்ற பெயரை மாற்றி விட்டு தேவசகாயம் பிள்ளை என்று பெயரை மாற்றிக் கொள்கிறார்.

இதற்கிடையில் தேவசகாயம் பிள்ளை மதம் மாறிய விவகாரம் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரியவருகிறது. அந்த காலகட்டத்தில் உயர் ஜாதி இந்துக்கள் வேறு மதத்தைத் தழுவக் கூடாது என்பது அரச கட்டளை ஆகும். எனவே அரச கட்டளையை மீறிய காரணத்திற்காக தேவசகாயம் பிள்ளை சிறை வைக்கப்படுகிறார்.

வணங்கிய கிறிஸ்தவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்: இருப்பினும் மனம் மாறாததால் தேவசகாயம் பிள்ளையை எருமைமாடு மீது அமர வைத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மன்னர் கட்டளையிட்டுள்ளார். தேவசகாயம் பிள்ளை சென்ற இடங்களிலெல்லாம் அவரை வணங்கிய கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பல சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட பிறகும் இந்து மதத்திற்கு மாற தேவசகாயம் பிள்ளை மறுத்த காரணத்தால் 1752 ஜனவரி 14 ஆம் தேதி மன்னரின் கட்டளைப்படி தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடலை ஒரு காட்டில் வைத்து படைவீரர்கள் எரிக்கின்றனர்.

புனித சவேரியார் ஆலயம்: இந்த தகவலை அறிந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலர் தேவசகாயம் பிள்ளையின் உடலில் மிஞ்சிய பாகங்களை எடுத்து வந்து அவருக்குக் கல்லறை கட்டியுள்ளனர். அந்த இடத்தில் தற்போது புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் தேவசகாயம் பிள்ளை சுட்டுக்கொல்லப்பட்ட இடமான காற்றாடி மலை நாளடைவில் தேவசகாயம் மவுண்ட் என அழைக்கப்பட்டு தற்போது அங்கு தேவாலயம் மற்றும் தேவசகாயம் பிள்ளை சார்ந்த வரலாற்று குறிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் சுடப்படும் போது அவர் முழங்காலிட கால் தடம் இருந்த இடத்தில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

வணங்கிய கிறிஸ்தவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்

திருட்டு குற்றம் : அதேசமயம் தேவசகாயம் பிள்ளை மதம் மாறிய காரணத்திற்காகக் கொல்லப்படவில்லை என்றும் அரண்மனையில் திருடிய குற்றத்திற்காகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பி வந்தனர். தேவசகாயம் பிள்ளை கிறிஸ்தவராக மாறியதற்கும் அவர் அற்புதம் நிகழ்த்தியிருக்கும் இதுவரை அதிகாரப்பூர்வ சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டாலும். கோட்டார் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்றளவும் தேவசகாயம் பிள்ளையின் அற்புதத்தை 100% நம்பி அவரை வழிபட்டு வருகின்றனர்.

எனவே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கத்தோலிக்க சபையை சேர்ந்த பல்வேறு ஆயர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கத்தோலிக்க திருச்சபை தலைமை: கிறிஸ்தவ நம்பிக்கை காரணமாகவே தேவசகாயம்பிள்ளை கொல்லப்பட்டார் என்பதை சில ஆதாரத்தோடு அப்போதைய கொச்சி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கிளைமென்சு யோசப் என்பவர் ரோமில் உள்ள கத்தோலிக்க திருச்சபை திருத்தந்தையிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில் கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாக தேவசகாயம் பிள்ளைக்கு இறை ஊழியர், அருளாளர் என்ற பட்டங்களை வழங்கி கவுரவித்து வந்தது. இதனிடையே, கடந்த 2012 டிசம்பர் இரண்டாம் தேதி தேவசகாயம் பிள்ளைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இதுபோன்ற சூழலில்தான் ஒரு படி மேலே சென்று தற்போது கத்தோலிக்க திருச்சபை தலைமை தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியிருக்கிறது.

புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் - தேவசகாயம் பிள்ளை

புனிதர் பட்டம் பெறும் முதல் நபர்: இந்தியாவில் ஏற்கனவே சிலர் இதுபோன்று புனிதர் பட்டம் பெற்று இருக்கின்றனர். குறிப்பாகக் கேரள மாநிலத்தில் 6 பேர் வரை புனிதர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் தேவசகாயம் பிள்ளை தான் என்ற பெருமை கிடைத்துள்ளது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதை மிகப் பெருமையாகக் கருதுகின்றனர் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க இங்கிருந்து பல ஆயர்கள் செல்கின்றனர். முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயரிய பொறுப்பில் இருந்த தேவசகாயம் பிள்ளை: இதுகுறித்து தேவசகாயம் பிள்ளை வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதி வரும் நாட்டுப்புற எழுத்தாளர் அ.க.பெருமாள் நம்மிடம் கூறுகையில், "உயர் சாதி வகுப்பில் பிறந்த தேவசகாயம் பிள்ளை மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் மிக உயரிய பொறுப்பில் இருந்து வந்தார். தனது நண்பர் மூலமாகவே அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார். அதற்காக அவர் கொல்லப்பட்டார்.

தேவசகாயம் பிள்ளை கொல்லப்பட்டதற்கு மதமாற்றம் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும் கூட அவர் அரண்மனையில் பணிபுரிந்த போது அனைத்து ஊழியர்களையும் சமமாக நடத்தி வந்தார். குறிப்பாக மன்னரின் படையில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்களை சரிசமமாக நடத்திவந்தார். இதை பிடிக்காத உயர்சாதி படைவீரர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மன்னரிடம் தேவசகாயம் பிள்ளை குறித்து அவதூறு பரப்பி உள்ளனர்.

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு அற்புதங்கள்: இதுவும் அவரது சாவுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் தேவசகாயம் பிள்ளை மன்னரால் துன்புறுத்தப்பட்ட போது அவரை நம்பி வணங்கிய மக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தற்போது அவருக்கு புனிதர் பட்டம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்குப் புனிதர் பட்டம் வழங்கி இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

தேவசகாயம் பிள்ளை குருவோ, மன்னரோ கிடையாது: மேலும் இது குறித்து திருநெல்வேலி கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி நம்மிடம் கூறுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குப் புனிதர் பட்டம் கிடைத்திருக்கிறது. இவர் ஒரு சாதாரண பொது நிலையை சேர்ந்தவர். அவர் குருவோ மன்னரோ கிடையாது. சாதாரணமான மனிதராக வாழ்ந்து வந்தவர். திருமணமானவர். எனவே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் ஏற்கனவே கேரளாவில் ஐந்து முதல் ஆறு பேர் வரை புனிதர் பட்டம் பெற்று இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இவர்தான் முதன் முறை புனிதர் பட்டம் பெறுகிறார்" என்று தெரிவித்தார்.

புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர்

புனிதர் பட்டம் என்பது (Canonization) இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்படும் நிகழ்வைக் குறிக்கும். புனிதர் பட்டம் அளிக்கப்படுவதால் ஒருவர் புனிதராவதில்லை. மாறாக அவர் புனிதராக கடவுளோடு இருக்கிறார் என்பதனை உலகிற்கு அறிவிக்கும் செயலேயாம். எவ்வகை புனிதராயினும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இப் பட்டம் திருத்தந்தையால் (போப்பாண்டவர்) மட்டுமே அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் விழா.. அமைச்சர்கள் இத்தாலி பயணம்

Last Updated : May 14, 2022, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.