ETV Bharat / state

வறண்டு கிடக்கும் தெப்பக்குளம் - நடவடிக்கை கோரும் பக்தர்கள்!

கன்னியாகுமரி:  கடந்த வாரம் முழுவதும் தொடர் கனமழை பெய்தபோதிலும் வறண்டு காட்சியளிக்கும் பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு, கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

author img

By

Published : Nov 9, 2019, 7:43 AM IST

வறண்டு கிடக்கும் தெப்பக்குளம்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி, வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் வைகாசி விசாக திருவிழாவின் பத்தாம் நாள் அன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம் வடக்குரத வீதியில் சுமார் 25 அடி ஆழத்தில் உள்ளது.

இந்த தெப்பக்குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து என்.பி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பாபநாசம் கிளை கால்வாய் வழியாக தண்ணீர் நிரப்பப்படுகிறது. மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயின் ஆரம்பத்திலிருந்து சர்ச் ரோடு வரை உள்ள பகுதி திறந்த வெளியாகவும் மீதம் உள்ள கால்வாய் பகுதி பூமிக்கு அடியில் ராட்சத குழாய் பதித்தும் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது கால்வாயின் ஆரம்பப் பகுதி புதர்மண்டிக் கிடப்பதால் தெப்பக்குளத்திற்கு சில ஆண்டுகளாக தண்ணீர் கொண்டுவருவதில் சிக்கல் இருந்துவருகிறது. இதனால் எப்போதும் தெப்பக்குளம் வறண்டே காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்துவந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியது. அவற்றில் உடைப்பு ஏற்படாமல் இருக்க உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த தெப்பக்குளத்திற்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

வறண்டு கிடக்கும் தெப்பக்குளம்

எனவே உடனடியாக இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்னும் பத்து நாட்களுக்குள் இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வராவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஹீரோ' சிவகார்த்திகேயனின் 'மால்டோ கித்தாப்புல'அர்த்தம் இதுதாங்கோ...!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் முழுவதும் தொடர் கனமழை பெய்த போதிலும் வறண்டு காட்சியளிக்கும் குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு, கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Body:tn_knk_01_mla_thepakulam_visit_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் முழுவதும் தொடர் கனமழை பெய்த போதிலும் வறண்டு காட்சியளிக்கும் குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு, கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் திருக்கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் வைகாசி விசாக திருவிழாவின் பத்தாம் நாள் அன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம் வடக்கு ரதவீதியில் சுமார் 25 அடி ஆழத்தில் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து என்.பி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பாபநாசம் கிளை கால்வாய் வழியாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 3 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயின் ஆரம்பத்திலிருந்து சர்ச் ரோடு வரை உள்ள பகுதி திறந்த வெளியாகவும் மீதி உள்ள கால்வாய் பகுதி பூமிக்கு அடியில் ராட்சத குழாய் பதித்தும் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது தற்போது கால்வாயின் ஆரம்ப பகுதி புதர்மண்டி கிடப்பதால் தெப்பக்குளத்திற்கு சில ஆண்டுகளாக தண்ணீர் கொண்டுவருவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதனால் எப்போதும் இந்த தெப்பக்குளம் வறண்டே காட்சியளிக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியது. அவற்றில் உடைப்பு ஏற்படாமல் இருக்க உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த தெப்பக்குளத்திற்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக இந்த தெப்பக் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வராவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எம்எல்ஏ இன்று ஆய்வு செய்து பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.