கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் ராதாபுரம், லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், போன்ற பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலங்களுக்கு ராதாபுரம் கால்வாய்க்கு செல்லும் அழகப்பபுரம் நிலப்பாறை கால்வாயில் இருந்து இன்று(ஜூன்.16) சபாநாயகர் அப்பாவு நீரை திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய அவர் " வழக்கமாக ராதாபுரம் கால்வாய்க்கு 20 நாள்கள் அல்லது ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை அடுத்து இந்த முறை முன்னதாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் மகிழ்ச்சி!