ETV Bharat / state

'மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்..!' - குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை - fishermen

கன்னியாகுமரி: மேற்கு மத்திய அரபிக் கடலில் 24ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

kanyakumari
author img

By

Published : Jul 21, 2019, 9:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் சூறை காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.7மீ முதல் 4.3மீ உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 22ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும் என்பதோடு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசும் எனத் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

மேலும், வரும் 24ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மேற்கு மத்திய அரபிக்கடலில் 24 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை.

Body:மேற்கு மத்திய அரபிக்கடலில் 24 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மேற்கு மத்திய அரபிக் கடலில் பலத்த காற்று இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் சூறை காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 5.20 அடியாக உள்ளது பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. சிற்றாறு ஒன்றில் 7.81 அடியாகவும் சிற்றாறு இரண்டில் 7.90 அடியாகவும் உள்ளன. பொய்கை அணையில் 7.30 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை யில் 43.55 அடியாகவும் உள்ளன. மழை அளவைப் பொறுத்தவரை பூதப்பாண்டியில் 1.4, சிற்றாறு ஒன்றில் 4, கன்னிமார் 3.2, குழித்துறை 3.6, பேச்சுப்பாறை 3, பெருஞ்சாணி 2.2, புத்தன் அணை1, சிற்றாறு இரண்டில் 2, தக்கலை 2.1, மாம்பழத்துறையாறு 10.2, முள்ளங்கினா விளை 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.7 மீட்டர் முதல் 4.3 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 22 ஆம் தேதி வரை இந்த நிலை காணப்படும். மேலும் மேற்கு ,தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். வரும் 24ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்றும் பலத்த காற்றின் தாக்கம் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.