ETV Bharat / state

வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி: திக்கணங்கோடு ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பரிந்துரை செய்த நபருக்கு இலவச வீடு வழங்கவில்லை எனக் கோரி, ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ward members sit struggle!
Ward members sit struggle!
author img

By

Published : Sep 4, 2020, 2:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஆறு வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு நபருக்கு இலவச வீடு வழங்க கேட்டுக்கொண்டனர்.

ஆனால், ஊராட்சி நிர்வாகம் இலவச வீடு திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலில் அவரை சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அவரது பெயர் ஏற்கெனவே பிரதமரின் இலவச வீடு திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருப்பதால், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு இலவச வீடு வழங்கவில்லை எனக் கூறி, ஆறு வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை பின் போக்குவரத்துறை அமைச்சர் குலதெய்வக் கோயிலில் வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.