இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “குமரி மாவட்ட மீன்வளத்துறை மீனவர்களின் நலத்திட்டங்களை மறுக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க விடாமல் செய்துவருகின்றனர். மாவட்டத்தில் ஆய்வுசெய்து பதியப்பட்ட வள்ளங்கள் 6,642 உள்ளன.
ஆனால் 2,245 வள்ளங்களுக்குதான் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 4,397 வள்ளங்களுக்குதான் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வள்ளங்களுக்கும் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கக் கேட்டு இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது” என்றனர்.