தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அலுவலர்களின் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை தோவாளை தாலுகா அலுவலகத்திலிருந்து லாரி மூலம் நாகர்கோவில் ஆட்சியர் (மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர்) அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் தீவிரப் பாதுகாப்புடன் அதற்குரிய அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வேட்பாளரை சார்ந்தவர்கள் ரூ.50,000க்கும் மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்!