விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை! - விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை
கன்னியாகுமரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளையில் சிறப்பு மலர் சந்தை நடைபெற்றுவருகிறது

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரியில் உள்ள தோவாளை பூமார்கெட்டுக்கு மலர்களின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, ஓசூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 டன் பூக்கள் வரவைக்கப்பட்டுள்ளன .
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு பூக்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது . பிச்சி மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000த்திற்கும் , சம்பங்கி கிலோ ரூ.500க்கும்,ரோஜா ரூ.200க்கும் , அருகம்புல் ரூ. 60திற்கும் விற்கப்படுகிறது.
பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் அதிகம் பூக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வால் தோவாளை மலர்ச் சந்தை பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளையில் இன்று அதிகாலை முதல் சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது .பிச்சி மல்லி அரளி உட்பட அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயர்வு. ஒரே நாளில் 15 டண் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடபடுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தையில் இன்று அதிகாலை முதல் சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக ராயகோட்டை திண்டுகல் மதுரை ஓசூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் குமரி மாவட்டத்தில் குமாரபுரம் ஆரல்வாய்மொழி தோவாளை செண்பகராமன் புதூர் ஆகிய ஊள்ளூர் இடங்களில் இருந்தும் சிறப்பு மலர் சந்தைக்காக சுமார் 15 டண் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது. விநாயகர் சதூர்த்திக்காக பொதுமக்களுக்கு பூக்களின் தேவை மிக அதிகமாக இருந்து வருவதால் தோவாளை மலர் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 100 ரூபாய்கு விற்பனையான பிச்சி மல்லிகை பூக்கள் இன்று பத்து மடங்கு விலை உயர்ந்து கிலோ 1000 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. சம்பங்கி பூ கிலோ 50 ரூபாயில் இருந்து மிக கடுமையாக விலை அதிகரித்து கிலோ 500 ரூபாய்க்கும் அருகம்புல் 10 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் விற்க்கப்படுகிறது . மேலும் அரளிபூ 40 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் ரோஜா 60 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் வாடாமல்லி 20 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் தாமரை ஒன்று 2 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் அதிகம் பூக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வால் தோவாளை மலர் சந்தை பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.இந்த விலை உயர்வு இன்றும் நாளையும் மட்டுமே இருக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்தார்கள்Conclusion:
TAGGED:
Flower