ETV Bharat / state

சீல் வைக்கப்பட்ட கிராமம் : கண்டுகொள்ளாத நிர்வாகம் - உணவுக்கு வழியின்றி தவிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி : கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக சீல் வைக்கப்பட்டிருக்கும் மணிக்கட்டிபொட்டல் கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Apr 15, 2020, 3:45 PM IST

Village Sealed : People stray for food Administration not cared
சீல் வைக்கப்பட்ட கிராமம் : கண்டுகொள்ளாத நிர்வாகம் - உணவுக்கு வழியின்றி தவிக்கும் மக்கள்!

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிப்பை தடுக்க பல்வேறு பகுதிகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணிக்கட்டிபொட்டல், அனந்தசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கிராமங்கள் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களும் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் பரிசோதனை நடந்து வருகிறது.

மணிக்கட்டிபொட்டல் ஊரை சுற்றிலும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து கிருமி நாசினி தெளித்தல், பாதிக்கப்பட்டவர்களை சுகாதார மையத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் செல்லுதல் உள்பட சுகாதார பணிகள் நடைபெறுகின்றன.

இக்கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் வெளியே செல்லவும் அண்டை கிராமத்தினர் அந்த கிராமத்திற்கு செல்லவும் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

அதிகமான விவசாயிகளை கொண்ட இந்த கிராமத்திலிருந்து விவசாயிகள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாததால் வாழை போன்ற விவசாய பயிர்கள் கவனிக்கப்படாமல் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கன்னியாகுமரியில் அதிகரிக்கும் கரோனா தாக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.