கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு அடுத்த பனங்காலவிளை ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொடுத்துள்ள புகாரில், "கடையாலுமூடு பேரூராட்சியில் பனங்காலவிளை என்னும் ஊரில் நாங்கள் வசித்து வருகிறோம். ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று கடையாலுமூடு தாஸ் மருத்துவமனையில் அபினேஷ் என்ற சிறுவனின் இறப்பு ஏற்பட்டது.
அதற்கு காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விஜிலா எந்த செவிலியரை தேடி காவ ல்துறையினர் பனங்காலவிளைக்கு வருகின்றனர்.
ஆனால், இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத நபர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றனர். இதனால் எங்களுக்கு ஊரில் வசிக்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே ஊரில் உள்ள வீடுகளுக்கு காவலர்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களை தொந்தரவு செய்யும் போலீஸ்: காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் - காவல்துறையினர் விசாரணை
கன்னியாகுமரி: ஊர் பொதுமக்களை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.