ETV Bharat / state

குமரியில் அபார வெற்றி: தந்தை கனவை நனவாக்கத் தயாராகும் விஜய் வசந்த்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றிபெற்றுள்ளார்.

விஜய் வசந்த்
விஜய் வசந்த்
author img

By

Published : May 2, 2021, 8:07 PM IST

கடந்த 2019 தேர்தலில் இரண்டரை லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர் வசந்தகுமார். கடந்த ஆண்டு இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது மகனும், நடிகருமான விஜய் வசந்த் தந்தையின் அரசியல் பாதையில் தன் பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து, கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுடன் நடந்த கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

விஜய் வசந்த் வெற்றி
விஜய் வசந்த் வெற்றி

இவருக்கு எதிராக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் களம்கண்டார். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன் மீது அன்பும், பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

அன்னையிடம் ஆசி பெறும் விஜய் வசந்த்
அன்னையிடம் ஆசி பெறும் விஜய் வசந்த்

விஜய் வசந்த் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் 2,58,712 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.