ETV Bharat / state

’தற்காலிக செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’ - விஜய் வசந்த் எம்.பி - தற்காலிக செவிலியர்கள்

கன்னியாகுமரி: கரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை மனு அளித்தார்.

vijay
vijay
author img

By

Published : Jun 8, 2021, 9:46 PM IST

Updated : Jun 8, 2021, 9:51 PM IST

கரோனா பேரிடர் காலத்தில் ஆய்வகப் பணிகளுக்காக மனிதவள மேம்பாட்டு மையத்தின் மூலம், மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில சுமார் 15க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் கடந்த ஒரு ஆண்டாகப் பணியாற்றி வந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து செவிலியர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியரை சந்தித்து பணியிலிருந்து நிறுத்தப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்கள் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தமாலும், பேருந்து வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் பல்வேறு இடங்களுக்குச் சென்று சளி மாதிரிகளை சேகரித்து மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் களப்பணியாற்றியுள்ளனர்.

அவர்களை இப்போது பணிக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் செய்த பணியை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும்” என்றார்.

Last Updated : Jun 8, 2021, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.