ETV Bharat / state

விஜயதசமியையொட்டி நாகர்கோவிலில் நடந்த ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி - நாகர்கோவிலில் ஏடு தொடங்கும்

விஜயதசமியையொட்டி, நாகர்கோவில் அருகே கோயில் ஒன்றில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பலர் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 5, 2022, 2:29 PM IST

கன்னியாகுமரி: விஜயதசமியையொட்டி, தேவி கோயில்களில் இன்று (அக்.5) நடந்த குழந்தைகளுக்கான கல்வி ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன் ஒருபகுதியாக, நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரர் கோயிலில் உள்ள சரஸ்வதி சந்நிதானத்தில் கோயில் குருக்கள் தங்கத்தால் நாவிலும் பச்சரிசியிலும் 'அகர முதல' எழுத்துகளை எழுதச்செய்து, குழந்தைகளின் கல்வியைத்தொடங்கி வைத்தனர்.

இதில், ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் வருகை தந்தனர். விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் அவர்களின் வாழ்வில் கல்வி செல்வம் பெருகும் என்ற ஐதீகம் அடிப்படையில் வந்துள்ளோம் என பெற்றோர் மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு தங்கத்தால் நாவில் எழுதும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி

இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் வருகை தந்தனர். நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக கடைப்பிடிக்கப்பட, தேவி கோயில்களில் குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி மங்களகரமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலின் 9ஆம் நாள் நவராத்திரி விழா - அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.