தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பான காட்சிகளை வீடியோ எடுக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 3 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்யும் வீடியோ நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உரிமை என்ற புதிய நிபந்தனையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக போடப்பட்ட தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு புகைப்பட கலைஞர்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ கிராபர்கள், போட்டோகிராபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும் என்றும் இல்லையென்றால், தேர்தலை புறக்கணிப்போம் என்றும் கோஷம் எழுப்பினர். இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர் சுவரொட்டிகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: 7 சாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளராக இணைக்க மாநிலங்களவை ஒப்புதல்!