நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசியத் தேவைகள், அவசரத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வெளியே நடமாடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள ராமன் புதூர் பகுதியிலுள்ள காய்கறிக் கடையில் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி வழங்கப்படுகிறது. முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இதுபோல் இலவச முகக் கவசங்களை வழங்குவதாக கடையில் இருந்தவர்கள் தெரிவித்தனர். காய்கறி வியாபாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் - கமல் ட்வீட்