கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டு பேசினார். அவரின் தயவால் இன்று பதவிக்கு வந்தவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே இந்த கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி. முதியோர் பென்சன் திட்டத்தை கொண்டு வந்து அதற்கு நிதி ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசின் காலக்கட்டத்தில் முதியோர்கள் தங்கள் பென்ஷனை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்", என்றார்.
'பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் மனவேதனை..!' - வசந்தகுமார் - வசந்தகுமார்
கன்னியாகுமரி: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் உண்மையான அதிமுக தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டு பேசினார். அவரின் தயவால் இன்று பதவிக்கு வந்தவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே இந்த கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி. முதியோர் பென்சன் திட்டத்தை கொண்டு வந்து அதற்கு நிதி ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசின் காலக்கட்டத்தில் முதியோர்கள் தங்கள் பென்ஷனை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்", என்றார்.
Body:குமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவினர் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அந்த மோடியா இந்த லேடியா என்று சவால் விட்டு பேசினார்.
அத்தகையவரின் தயவால் இன்று பதவிக்கு வந்தவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். எனவே இந்த கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி.
முதியோர் பென்சன் திட்டத்தை கொண்டு வந்து அதற்கு நிதி ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசின் காலகட்டத்தில் முதியோர்கள் தங்கள் பென்ஷனை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் இதனை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Conclusion: