நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வசந்தகுமார். டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் வசந்தகுமார் எம்பி, பெண் ஒருவருடன் டிக் டாக்கில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். முறுகல் தோசை ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வசந்தகுமாரின் அருகில் இருக்கும் பெண் ஒருவர், இவர் யார் என்று தெரிகிறதா? என கேள்வி கேட்கிறார்.
அந்தப் பெண் வசந்தகுமார் பற்றி கூறுகிறாரோ இல்லையோ, ஹோட்டலை பற்றி விளம்பரப்படுத்துவது போல் அதிகம் பேசுகிறார். இந்த ஹோட்டலில் உணவு சுவையாக இருக்கும். க்யூவில் நின்று தான் சாப்பிடவேண்டும், அவ்வளவு கூட்டம் இருக்கும்.
இறுதியாக இட்லி மற்றும் அதனுடன் வழங்கப்படும் சட்னி வகைகள் போன்றவற்றை விலாவரியாகக் கூறி அதன் விலையையும் கூறி சாப்பிட வாருங்கள் என்பது போல் பேசுகிறார். இந்தப் பெண் பேசுவதற்கு எல்லாம் வசந்தகுமார் எம்பியும் விளம்பர படத்தில் நடிப்பது போல் போஸ் கொடுக்கிறார். தற்போது இந்த வீடியோ ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.