ETV Bharat / state

'தமிழ்நாடு முக்கியத்துவம் பெற பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும்!'

கன்னியாகுமரி: மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு முக்கியத்துவம் பெற பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும் என மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

Union Home Minister Kishan Reddy said Pon. Radhakrishnan should win to get Tamil Nadu prominence in the Union Cabinet

author img

By

Published : Apr 2, 2021, 1:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்டத்திலுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைசெய்கிறார்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேடையினை இன்று காலை மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

தமிழ்நாடு முக்கியத்துவம் பெற பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும்

அப்போது பேசிய அமைச்சர் கிஷன் ரெட்டி, "மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு முக்கியத்துவம் பெற பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும். தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் இந்த முறை நிச்சயம் பாஜக இடம்பெறும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.