ETV Bharat / state

பட்டப்பகலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு! - ethankadu theft news

கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் அருகேயுள்ள ஈத்தங்காட்டில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு  ஈத்தங்காடு  தென்தாமரைகுளம்  கன்னியாகுமரி  ethankadu theft news  ethankadu two wheeler theft news
பட்டப்பகலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனம் திருட்டு
author img

By

Published : Jul 11, 2020, 10:21 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகேயுள்ள ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சகாய ரொனால்ட்(38), இவர், நாகர்கோவிலில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 9) தனது வீட்டு வளாகத்துக்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மதியம் ஓய்வெடுத்துள்ளார்.

பின்னர், எழுந்து பார்க்கையில், வீட்டின் கேட் திறந்திருந்தது. இதனால் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை பார்க்க சென்றபோது, அது திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அக்கம்பக்கம் விசாரித்த போதிலும் அவருடைய இருசக்கர வாகனம் கிடைக்கிவில்லை.

பட்டப்பகலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சகாய ரொனால்டு வீட்டிற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதனை செய்தனர்.

அதில், ஒருவர் கேட்டைத் திறந்து வீட்டு காம்பவுண்டுக்குள் வந்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு - காவல் துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.