கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே உள்ள கண்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாகு (21). இவர் ஆடு, மாடுகளை வளர்த்துவருகிறார்.
மேலும் இவர் மாட்டு வண்டி பந்தையத்திற்கு பயன்படுத்துகின்ற விலை மதிப்பு மிக்க காளைகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு (ஆக.23) ஆடு, மாடுகளை பராமரித்து விட்டுச் சென்றவர் இன்று காலையில் காளைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றள்ளார்.
அப்போது, அங்கிருந்த பந்தய காளைகள் கட்டியிருந்த கயிறு அறுக்கப்பட்டு, இரண்டு காளைகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.